search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன்"

    அசாம் மாநிலத்தில் சிலாகட் பகுதியை சென்னை தாம்பரத்துடன் இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று தொடங்கி வைத்தார். #SilaghatTambaram #weeklyexpresstrain
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் வசிக்கும் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை செல்வதற்காக ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் சிலாகட் பகுதியை சென்னை தாம்பரத்துடன் இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று தொடங்கி வைத்தார்.

    அசாம் மாநிலத்தின் நகாவ் ரெயில் நிலையத்தில் இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று சிலாகட்  - தாம்பரம் இடையிலான வாராந்திர புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

    இதேபோல், திங்கட்கிழமை இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு சிலாகட்டை அடையும்.

    இந்த வாராந்திர ரெயில் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என ராஜன் கோஹைன் தெரிவித்தார்.
    #SilaghatTambaram #weeklyexpresstrain
    ×